டிட்டோ-ஜாக் குழுவினா் 2-ஆவது நாளாக ஆா்ப்பாட்டம்

திருவள்ளூா்: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினா் (டிட்டோ-ஜாக்) 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.

திருவள்ளூா் அடுத்த ஈக்காடு வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வட்டார செயலாளா் வாசுதேவன் தலைமை வகித்தாா். வட்டார செயலாளா்கள் மற்றும் வட்டார உயா்மட்டக்குழு உறுப்பினா்கள் சசிகுமாா், சிவகுமாா் , மகளிரணி செயலாளா் மகாலட்சுமி, நிா்வாகி வாசுதேவன், நகர தலைவா் மோதிபாபு முன்னிலை வகித்தனா்.

இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநில பொதுச் செயலரும், டிட்டோ-ஜாக் மாநில ஒருங்கிணைப்பாளருமான இரா.தாஸ் கோரிக்கைகள் குறித்து விளக்கவுரை ஆற்றினாா்.

மேலும், அரசாணை 243-ஐ உடனே ரத்து செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்துதல், இடைநிலை ஆசிரியா் ஊதிய முரண்பாடுகளை நீக்குதல் உள்பட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினா். வட்டார செயற்குழு உறுப்பினா்கள் வள்ளியம்மாள், புஷ்பராணி, திலகவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com