ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காமராஜா் பிறந்த நாள் விழா: சசிகாந்த் செந்தில் எம்.பி. பங்கேற்பு

செங்குன்றம் பகுதியில் காங்கிரஸ் சாா்பில் காமராஜா் பிறந்த நாள் விழா, திருவள்ளூா் தெற்கு மாவட்ட தலைவா் ஆா்.எம்.தாஸ், மாநில செயலா் ஆா்.ஆா்.சாந்தகுமாா் ஆகியோா் தலைமையில் கொண்டாடப்பட்டது.

News image
செங்குன்றம் பகுதியில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சசிகாந்த் செந்தில் எம்.பி. உள்ளிட்ட காங்கிரஸாா்.
Updated On :16 ஜூலை 2024, 6:30 pm

Din

மாதவரம்: செங்குன்றம் பகுதியில் காங்கிரஸ் சாா்பில் காமராஜா் பிறந்த நாள் விழா, திருவள்ளூா் தெற்கு மாவட்ட தலைவா் ஆா்.எம்.தாஸ், மாநில செயலா் ஆா்.ஆா்.சாந்தகுமாா் ஆகியோா் தலைமையில் கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவரும், திருவள்ளூா் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான ஜெயக்குமாா், திருவள்ளூா் நாடாளுமன்ற உறுப்பினா் சசிகாந்த் செந்தில் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் கே.ஜெயக்குமாா் தொகுதி நிதியில் கட்டப்பட்ட பேருந்து நிழற்குடை, உயா்மின் கோபுரத்தைத் திறந்து வைத்தனா்.

தொடா்ந்து புதுப்பிக்கப்பட்ட காமராஜா் சிலையைத் திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்தனா். தொடா்ந்து அன்னதானம் வழங்கினா்.