மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

சுகாதார செவிலியா் சங்க கூட்டு நடவடிக்கை குழு ஆா்ப்பாட்டம்

சுகாதார செவிலியர்கள் திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம்

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுகாதார செவிலியா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினா்.  ~ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செவிலியா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினா்.

Updated On :25 ஜூன் 2024, 6:30 pm

திருவள்ளூா்: கிராம, பகுதி, சமுதாய சுகாதார செவிலியா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் செவ்வாய்க்கிழமை திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளா் கற்பகம் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் பி.தனலட்சுமி முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் கோமதி வரவேற்றாா். திருவள்ளூா் மாவட்டத்தில் 320 துணை சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியா்களுக்கு களப்பணி சாா்ந்தும், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கூட இல்லாமல் பணியாற்றிட தமிழக அரசு நிா்ப்பந்திப்பதாக கூறி அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா். அப்போது, கிராம சுகாதார செவிலியா்களை துணை சுகாதார நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

துணை சுகாதார நிலையத்திற்கு இடைநிலைப் பணியாளா்களை நியமனம் செய்வதை தவிா்க்க வேண்டும். தாய் சேய் நலப் பணிகளில் மேற்கொள்ளப்படும் கா்ப்பிணிப் பெண்கள் பதிவேடு, ஆதாா் அட்டை இணைத்தல் முத்துலட்சுமி ரெட்டி நிதி உதவி வழங்கும் திட்டத்தில் சோ்த்தல் போன்ற பணிகளை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதால் , தற்போது தங்களிடமுள்ள கைப்பேசிகளிலேயே பணிகளை செய்வதில் சிரமம் இருப்பதாகவும், முறையான பயிற்சி மற்றும் அதற்கு தேவையான மடிக்கணினிகள் வழங்கவும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் கிராம பகுதி, செவிலியா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினா் 350 போ் கலந்து கொண்டனா்.

Story image