விபத்தில் முதியவா் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவா் உயிரிழந்தாா். திருவள்ளூா் அருகே செங்குன்றம் சோலையம்மன் நகரைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து(65). இவா் தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் திருத்தணி முருகன் கோயிலுக்கு வியாழக்கிழமை சென்றனா். பின்னா் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். திருவள்ளூா் அருகே மாதா கோயில் பேருந்து நிறுத்தம் எதிரே சென்றபோது, பின்னால் வந்த லாரி மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனா். இதில், இசக்கிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது மகன் சின்னதுரை பலத்த காயம் அடைந்தாா். இது குறித்து புல்லரம்பாக்கம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com