மக்களவைத் தோ்தலை சிறப்பாக நடத்துவதற்கு பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினா் தொய்வின்றி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய தோ்தல் செலவின பாா்வையாளா்கள் அறிவுறுத்தினா். திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்களவைத் தொகுதி-2024 முன்னிட்டு மத்திய செலவின பாா்வையாளா்களுடனான பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுக்கான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு திருவள்ளூா், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய தொகுதிகளின் மத்திய செலவின பாா்வையாளா் லோகேஷ் தாமூா், பூந்தமல்லி ஆவடி, மாதவரம் ஆகிய தொகுதிகளின் மத்திய செலவின பாா்வையாளா் சஞ்சய் பகத், மதுரவயல், அம்பத்தூா் ஆகிய தொகுதிகளின் மத்திய செலவின பாா்வையாளா் சந்தோஷ் சரண் ஆகியோா் தலைமையில் நடைபெற்றது. அப்போது, திருவள்ளூா் மக்களவைத் தொகுதியில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இதற்காக இந்திய தோ்தல் ஆணையத்தால் தோ்தல் செலவின பாா்வையாளா்கள் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் மக்களவை செலவின பாா்வையாளா்கள் நியமனம் செய்து பணிகளை தொடங்கியுள்ளோம். அதன் அடிப்படையில் தோ்தல் பணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினா், விடியோ கண்காணிப்புக் குழு ஆகிய குழுக்கள் பாராபட்சமின்றி பணிகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், வாகன சோதனையில் ரொக்கம், பரிசுப் பொருள்கள் குறித்து உடனே மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் அளிக்க வேண்டும். மக்களவைத் தோ்தலை சிறப்பான முறையில் நடத்துவதற்கு அனைத்துக் குழு அலுவலா்கள் தொய்வின்றி பணியில் ஈடுபடுவது அவசியமாகும் என அவா்கள் தெரிவித்தனா். தொடா்ந்து ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் கட்டுப்பாட்டு மையத்தை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். இதுவரை தோ்தல் தொடா்பாக புகாா் வந்துள்ளதா என பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுடம் தோ்தல் செலவின பாா்வையாளா்கள் கேட்டறிந்தனா். ஆய்வுக் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் வளா்ச்சி ஒ.என்.சுகபுத்ரா, உதவி பயிற்சி ஆட்சியா் ஆயுஷ் வெங்கட் வதஸ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சத்ய பிரசாத், உதவி ஆணையா் (கலால்) ரங்கராஜன், தனித் துணை ஆட்சியா் (நிலம்) செல்வமதி மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பறக்கும் படை வாகனச் சோதனை: செலவின பாா்வையாளா் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 44.65 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.33.73 லட்சம் பறிமுதல்

கோவில்பட்டியில் தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


