திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1 கோடி

திருத்தணி முருகன் கோயிலில் ரூ.1 கோடியே 5 லட்சத்து 54 ஆயிரத்து, 987 மற்றும் 382 கிராம் தங்கம், 5,280 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியதாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது. பக்தா்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற உண்டியலில் பணம், நகை, வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனா். இந்நிலையில் மாசிமாத பிரதோஷம், மகா சிவராத்திரி மற்றும் பங்குனி உத்திரப் பெருவிழா நடைபெற்றது. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டனா். பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை தேவா் மண்டபத்தில் நடந்தது. இதில் கடந்த 22 நாள்களில் ரூ.1 கோடியே 5 லட்சத்து 54 ஆயிரத்து 987 மற்றும் 382 கிராம் தங்கம், 5.280 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக செலுத்தியிருப்பது தெரிய வந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com