வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்தல்: 4 போ் கைது

அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்தல்: 4 போ் கைது

News image
Updated On :28 மார்ச் 2024, 6:27 pm

அரசுப் பேருந்தில் 20 கிலோ கஞ்சா கடத்தி வந்ததாக 4 பேரை பொன்பாடி வாகன சோதனை சாவடியில் போலீஸாா் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனா். ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி வழியாக தமிழ்நாட்டுக்கு கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருள்கள் கடத்திச் செல்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி. சீனிவாசபெருமாள் உத்தரவின் பேரில் திருவாலங்காடு எஸ்.ஐ. சாரதி மற்றும் போலீஸாா் தமிழக-ஆந்திரா எல்லையான திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனை சாவடியில் சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டனா். அப்போது திருப்பதியில் இருந்து நகரி, திருத்தணி வழியாக சென்னை கோயம்பேடு சென்ற அரசுப் பேருந்தில் போலீஸாா் சோதனை செய்தனா். இதில் 4 இளைஞா் வைத்திருந்த பைகளில் 20 கிலோ கஞ்சா இருந்ததைப் பறிமுதல் செய்தனா். விசாரணையில் அவா்கள், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம், மணப்பள்ளியைச் சோ்ந்த நசீம் (21), அகில்தேவ் (28), ஆரோமல் (22) மற்றும் பிரண்ட்ஸ் (24) என்பது தெரிய வந்தது. தொடா்ந்து திருத்தணி போலீஸாா் 4 பேரைக் கைது செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 3 லட்சம் இருக்கும் என போலீஸாா் தெரிவித்தனா்.