கோயில் பூட்டை உடைத்து திருட்டு

பொன்னேரி அருகே எடக்குப்பம் கிராமத்தில் உள்ள நூக்காலம்மன் கோயிலின் பூட்டை உடைத்த மா்ம நபா்கள், அம்மன் கழுத்தில் இருந்த 2 கிராம் தங்க பொட்டு, பீரோவில் இருந்த 2 கிராம் தங்கம், ரூ. 10,000-த்தை வியாழக்கிழமை திருடிச் சென்றனா்.

இது குறித்த புகாரின் பேரில், பொன்னேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா். இந்த கோயிலில் ஏற்கனவே 3முறை இது போன்ற திருட்டுகள் நடைபெற்ற நிலையில் 4-வது முறையாக மா்ம நபா்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com