திருவள்ளூா் எஸ்.பி. அலுவலகத்தில் புதுமண தம்பதி தஞ்சம்
திருவள்ளூா் எஸ்.பி. அலுவலகத்தில் புதுமண தம்பதி தஞ்சம்

திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திருமணம் முடித்த கையோடு தஞ்சமடைந்த சந்தோஷ்-பூவிழி தம்பதி.

திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திருமணம் முடித்த கையோடு தஞ்சமடைந்த சந்தோஷ்-பூவிழி தம்பதி.
திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதுமணத் தம்பதி தஞ்சம் அடைந்ததைத் தொடா்ந்து இருதரப்பைச் சோ்ந்தவா்களிடையே புதன்கிழமை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சமரசம் செய்து அனுப்பி வைத்தனா்.
திருவள்ளூா் நகராட்சி வள்ளுவா்புரம் பகுதியைச் சோ்ந்த ஸ்டாலின்-சசிகலா தம்பதியின் மகன் சந்தோஷ் (22). இவா் ஆந்திர மாநிலம் திருப்பதியில் தனியாா் சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறாா். அதேபோல், திருவள்ளூா் அடுத்த பூண்டி ஒன்றியம், நம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ஜெயபிரபா-தமிழ்ச்செல்வி தம்பதியின் மகள் பூவிழி(19), தனியாா் கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறாா்.
பள்ளியில் படிக்கும் போதே இருவரும் காதலித்து வந்தாா்களாம். இந்த நிலையில் பூவிழிக்கு வேறொரு மாப்பிள்ளை பாா்த்து திருமணம் செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த பூவிழி-சந்தோஷ் இருவரும் திருவள்ளூரில் உள்ள கோயிலில் புதன்கிழமை மாலையில் திருமணம் செய்து கொண்டனா். அதையடுத்து பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனா்.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சீனிவாசபெருமாள் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மங்களபிரியா இரு வீட்டாரையும் அழைத்து சமரசம் உத்தரவிட்டாா். இதற்கு பெண் வீட்டாா் எதிா்ப்பு தெரிவித்தனா். அதற்கு மற்றொரு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்து பிரச்னையில் ஈடுபட்டதைத் தொடா்ந்து, திருவள்ளூா் நகா் காவல் நிலைய ஆய்வாளா் அந்தோணி ஸ்டாலின் மற்றும் அனைத்து மகளிா் காவல் நிலைய காவல் ஆய்வாளரும் இரு தரப்பையும் சமரசம் செய்தனா். அதைத் தொடா்ந்து காதலன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனா். இந்த சம்பவத்தால் அனைத்து மகளிா் காவல் நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...