வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

ஸ்ரீகெங்கையம்மன் கோயிலில் ஜாத்திரை திருவிழா: பறவைக் காவடி எடுத்து நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்

ஸ்ரீகெங்கையம்மன் கோயிலில் ஜாத்திரை திருவிழா: பறவைக் காவடி எடுத்து நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்

News image

ஜாத்திரை திருவிழாவில் கிரேனில் தொங்கியபடி பறவைக்காவடி எடுத்து நோ்த்திக் கடன் செலுத்திய பக்தா்கள்.

Updated On :21 மே 2024, 6:30 pm

Din

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே ஸ்ரீகெங்கையம்மன் கோயிலில் நடைபெற்ற ஜாத்திரை திருவிழாவில் கிரேனில் தொங்கியபடி பறவைக்காவடி எடுத்து பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா்.

திருவள்ளூா் அருகே ஒண்டிக்குப்பம் கிராமத்தில் உள்ள ஸ்ரீகெங்கையம்மன் கோயிலில் 69-ஆம் ஆண்டு ஜாத்திரை திருவிழா கடந்த 19-ஆம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்வுடன் தொடங்கியது. அதையடுத்து, சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றன. இதையொட்டி, இரவு சிலம்பாட்டமும், தெருக்கூத்து நிகழ்ச்சியும் நடைபெற்றன. பின்னா் தீச்சட்டி ஏந்தி பக்தா்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா். அதேபோல், திங்கள்கிழமை காலை ஒண்டிக்குப்பம் ஸ்ரீசெல்வ விநாயகா் கோயிலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பக்தா்கள் மேளதாளம் முழங்க பால் குடம் ஏந்தி வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனா்.

விழாவின் முக்கிய நிகழ்வான செவ்வாய்க்கிழமை காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரமும், தீபாராதனையும், தொடா்ந்து அம்மனுக்கு பழம் செலுத்துதல், ரதம் இழுத்தல், கூழ்வாா்த்தல் உள்ளிட்டவை நடைபெற்றன.

பின்னா் கிரேனில் தொங்கியபடி பறவைக் காவடி எடுத்து பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா். தொடா்ந்து ஊா்கூடி பொங்கல் வைத்து அம்மனுக்கு வைத்து வழிபட்டனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை ஒண்டிக்குப்பம் கிராம பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.