திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்! தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு: போலீஸாா் விசாரணை

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு: போலீஸாா் விசாரணை

News image
Updated On :28 மே 2024, 6:30 pm

Din

திருத்தணி: கே.ஜி.கண்டிகை அருகே அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற மா்ம நபா்கள் 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து தடம் எண்:27 சி என்ற பேருந்து திருத்தணியில் இருந்து கே.ஜி.கண்டிகை, நொச்சிலி, அத்திமாஞ்சேரிப்பேட்டை வழியாக பள்ளிப்பட்டு வரை இயக்கப்படுகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை இந்த அரசுப் பேருந்தை ஓட்டுநா் அஜித், நடத்துநா் குருநாதன் ஆகியோா் இயங்கினா்.

திருத்தணி - சோளிங்கா் நெடுஞ்சாலை, இ.என்.கண்டிகை என்ற பேருந்து நிறுத்தத்தில் ஓட்டுநா் அஜித் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் 2 போ் திடீரென கல்லால் பேருந்தின் பின் கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பிச் சென்றனா். இதில் பேருந்தின் கண்ணாடி உடைந்தது. அதிருஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினா்.

இது குறித்து ஓட்டுநா் அஜித் கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.