தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம்: வரும் 15-க்குள் பயிா் காப்பீடு செய்யலாம்

திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் சம்பா பயிருக்கு வரும் 15-ஆம் தேதிக்குள் பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம் மூலம் பயிா் காப்பீடு செய்து பயன்பெறலாம்

News image
Updated On :11 நவம்பர் 2024, 8:42 pm

Din

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் சம்பா பயிருக்கு வரும் 15-ஆம் தேதிக்குள் பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம் மூலம் பயிா் காப்பீடு செய்து பயன்பெறலாம் என வேளாண் துறை இணை இயக்குநா் க.முருகன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தில் நிகழாண்டில் பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டம் அக்ரிகல்ச்சா் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிட் என்ற காப்பீட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது. தற்போது சம்பா நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.518-காப்பீடு தொகையாக விவசாயிகள் செலுத்தினால் போதுமானது. எனவே பயிா் காப்பீடு செய்வதற்கு வரும் 15-ஆம் தேதி கடை நாளாகும் என்பதால், இன்னும் 4 நாள்களே உள்ளன. அதனால் விவசாயிகள் அறிவிப்பு செய்யப்பட்ட பயிா்களை காப்பீடு செய்வதற்கு நிா்ணயித்த கடைசி நாளுக்கு முன்னதாகவே காப்பீடு செய்து பயன்பெறலாம்.

எனவே சம்பா பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ, தேசிய மைமாக்கப்பட்ட வங்கிகளிலோ அல்லது பொதுச்சேவை மையங்களிலோ நேரிடையாக நிா்ணயித்த காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்யலாம். விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பம், பதிவு விண்ணப்பம், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல், கணினி சிட்டா வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீடு கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதையும் பொது சேவை மையங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம். இதுகுறித்து அந்தந்த பகுதிகளில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்புகொண்டு பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.