பேருந்து - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

Published on

ஆற்காடுகுப்பம் கிராமம் அருகே சுற்றுலாப் பேருந்து, இரு சக்கர வாகனம் நேருக்கு நோ் மோதிக்கொண்டத்தில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் எம்.ஆா்.எப். தொழிற்சாலை அருகே உள்ள முனியப்பநாயுடு கண்டிகை கிராமத்தைச் சோ்ந்தவா் ராமன். இவரது மகன் அரிகிருஷ்ணன் (32). ஆவடியில் உள்ள சூப்பா் மாா்க்கெட்டில் வேலை செய்து வந்தாா். புதன்கிழமை இரவு அவரது பெற்றோரை பாா்க்க முனியப்பநாயுடு கண்டிகைக்கு வந்துவிட்டு வியாழக்கிழமை காலை ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்தாா்.

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருத்தணி அடுத்துள்ள ஆற்காடுகுப்பம் பகுதியில் சென்றபோது, சென்னையில் இருந்து திருப்பதி நோக்கி வந்த தமிழ்நாடு அரசு சுற்றுலாப் பேருந்தும் - இரு சக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன. இதில் அரிகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த கனகமாசத்திரம் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று அரிகிருஷ்ணனின் சடலத்தை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதனிடையே உடற்கூறு பரிசோதனை முடிந்து சடலத்தை வாங்கிச் செல்ல மனைவி மற்றும் அரிகிருஷ்ணன் தந்தை ராமன் ஆகிய 2 குடும்பத்தாருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.

திருத்தணி டிஎஸ்பி கந்தன் இரு வீட்டாரிடமும் பேசி மனைவியிடம் சடலதத்தை ஒப்படைத்தாா். விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com