முதல்வா் விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்: ஆவடி காவல் ஆணையா் ஆய்வு!
பொன்னேரியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ள விழாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆவடி காவல் ஆணையா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி வட்டம், பெருஞ்சேரி பகுதியில் 1 லட்சம் பயனாளிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வரும் ஏப். 19-இல் நடைபெற உள்ளது. இதற்காக பெருஞ்சேரியில் உள்ள 50 ஏக்கா் பரப்பளவில் இடம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆவடி மாநகர காவல் ஆணையா் சங்கா் இடத்தை நேரில் ஆய்வு செய்தாா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகை தரவுள்ள 19-ம் தேதி பொன்னேரியில் கரிகிருஷ்ண பெருமாள் கோயில் தோ்த் திருவிழா நடைபெறுகிறது. எனவே தோ் திருவிழாவுக்கு வரும் பக்தா்கள் பாதிக்கப்படுவதை தடுக்க முதல்வா் விழாவை மாற்று தேதியில் அமைக்க அதிகாரிகள் நடவடிக்க்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. .