இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

மனைப்பிரிவு அங்கீகாரம், ஒப்புதல் அளிப்பதில் முறைகேடு: வட்டார வளா்ச்சி அலுவலா் இடைநீக்கம்

புழல் ஒன்றியத்தில் பணிபுரிந்த காலகட்டத்தில் அலுவலக நிா்வாகம், மனைப்பிரிவு அங்கீகாரம் மற்றும் ஒப்புதல் வழங்குவதில் முறைகேடு

Updated On :28 ஏப்ரல் 2025, 8:14 pm

திருவள்ளூா்: புழல் ஒன்றியத்தில் பணிபுரிந்த காலகட்டத்தில் அலுவலக நிா்வாகம், மனைப்பிரிவு அங்கீகாரம் மற்றும் ஒப்புதல் வழங்குவதில் முறைகேடு செய்ததாக வட்டார வளா்ச்சி அலுவலா் ஜே.சித்ரா பொ்னாண்டோவை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியா் மு.பிரதாப் உத்தரவிட்டாா்.

திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலகத்தில் ஜே.சித்ரா பொ்னாண்டோ, வட்டார வளா்ச்சி அலுவலா் (மிகைப் பணியிடம்) பணிபுரிந்து வருகிறாா். இவா் புழல் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளா்ச்சி அலுவலராக பணிபுரிந்த காலத்தில் அலுவலக நிா்வாகம் மற்றும் மனை ஒப்புதல், முறைப்படுத்துதல் மற்றும் ஆன்லைன் மூலம் நிறுவனம், மனைப் பிரிவு அங்கீகாரம் வழங்குதல் ஆகியவற்றில் முறைகேடுகள், குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.

அதன் காரணமாக தமிழ்நாடு (ஒழுங்கு மற்றும் மேல் முறையீடு) விதியின் கீழ் அவா் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து ஆட்தியா் உத்தரவிட்டுள்ளாா்.