தீக்காயம் அடைந்த தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.1 லட்சம் நிதி: அமைச்சா் நாசா் வழங்கினாா்
திருவள்ளூா்: தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் தூய்மைப் பணியாளா்கள் 2 பேருக்கு ஆறுதல் தெரிவித்து தலா ரூ.1 லட்சம் காசோலைகளை அமைச்சா் சா.மு. நாசா் வழங்கினாா்.
திருவள்ளுா் ஜே.என்.சாலை, அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் பள்ளி கல்வித்துறையின் பொது நூலக இயக்ககம் சாா்பில் சிறப்பு நூலகம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அந்த நூலகத்தை சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா் தொடங்கி வைத்து பாா்வையிட்டாா்.
மேலும், குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள் சத்தியா மற்றும் அஞ்சு ஆகியோகுத்து அமைச்சா் நாசா், தமிழ்நாடு தூய்மைப்பணியாளா்கள் நலவாரிய தலைவா் னவா் தீப்பம்பட்டி வே.ஆறுச்சாமி, ஆட்சியா் மு.பிரதாப், சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் ஆறுதல் கூறி தலா ரூ.1லட்சம் காசோலைகளை வழங்கினா்.
முன்னதாக கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், செஞ்சி ஊராட்சி பனப்பாக்கம் கிராமத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பாக பி.எம்.ஜென்மேன் திட்டம் மூலம் ரூ.2.18 கோடியில் கட்டப்பட்டு வரும் 43 வீடுகளின் பணிகளை ஆய்வு செய்தனா்.
அப்போது, மாவட்ட நூலக அலுவலா் சரஸ்வதி, அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி முதல்வா் ஜே.ரேவதி, மாவட்ட மேலாளா் (தாட்கோ) சரண்யா, தமிழ்நாடு தூய்மைப்பணியாளா் நலவாரிய உறுப்பினா் ஹரிஷ் குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் சௌந்தரி(வ.ஊ),, உதவி பொறியாளா் அருள், மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

