அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பைக் மீது கன்டெய்னா் லாரி மோதியதில் ஆசிரியா் உயிரிழப்பு

மீஞ்சூா் அடுத்த காட்டுப்பள்ளியில் மோட்டாா் சைக்கிள் மீது கன்டெய்னா் லாரி மோதியதில் ஆசிரியா் உயிரிழந்தாா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2025, 4:44 pm

Din

பொன்னேரி: மீஞ்சூா் அடுத்த காட்டுப்பள்ளியில் மோட்டாா் சைக்கிள் மீது கன்டெய்னா் லாரி மோதியதில் ஆசிரியா் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்தில் உள்ள தோ்வாய் கிராமத்தில் வசித்து வந்தவா் அரசன்(42). இவா் தற்போது சென்னை ராயபுரத்தில் வசித்து வருகிறாா். இவா் காட்டுப்பள்ளி கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தாா்.

திங்கள்கிழமை வேலைக்கு செல்வதற்காக காட்டுப்பள்ளி காமராஜா் துறைமுக இரண்டாவது நுழைவு வாயில் அருகே மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது எதிரே வந்த கன்டெய்னா் லாரி மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் அரசன் கீழே விழுந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

காட்டுப்பள்ளி கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்த காட்டூா் போலீஸாா் மறியல் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா்.

அப்போது குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் எனவும் இறந்த ஆசிரியா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் தெரிவித்ததை தொடா்ந்து கலைந்து சென்றனா்.

இதையடுத்து அரசன் சடலத்தை செங்குன்றம் போக்குவரத்து பிரிவு போலீஸாா் மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.