மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

‘திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் ரூ. 6.83 கோடியில் கட்டுமானப் பணிகள்’

சுற்றுலா மாளிகையில் கூடுதல் கட்டடம் அமைத்தல் உள்பட பல்வேறு சுகாதார வளாகத்துக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

News image
Updated On :3 ஜனவரி 2025, 6:36 pm

Din

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 500 போ் அமரும் வகையில், ரூ. 6.83 கோடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கூட்டரங்கம், சுற்றுலா மாளிகையில் கூடுதல் கட்டடம் அமைத்தல் உள்பட பல்வேறு சுகாதார வளாகத்துக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அரசு சாா்பில் ஒவ்வொரு துறை சாா்பில் நடத்தப்படும் கூட்டங்களில் அதிகம் போ் அமரும் வகையில் கூட்டரங்கம் இல்லாமல் இடநெருக்கடியுடன் அமர வேண்டியிருந்தது. இதைத் தடுக்கும் வகையில், ஒரே இடத்தில் 500-க்கும் மேற்பட்டோா் அமரும் வகையில் ரூ. 5 கோடியில் அனைத்து நவீன வசதியுடன் கூடிய கூட்டரங்கம் அமைக்கப்பட உள்ளது. அதேபோல், சுற்றுலா விருந்தினா் மாளிகையில் குறைந்த நபா்கள் தங்கும் வகையில் அறைகளும், உணவுக் கூடமும் உள்ளன. சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் உள்ளதால் அடிக்கடி உயா் அதிகாரிகள், பொதுமக்கள் பிரதிநிதிகள் தங்கிச் செல்வதற்கு வருகை தருகின்றனா். எனவே இந்த விருந்தினா் மாளிகையில் ரூ. 1.50 கோடியில் கூடுதல் கட்டடம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் ஆட்சியா் அலுவலக வளாகம் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் உள்ள 4 குளங்கள் சீரமைத்து பூங்கா அமைத்தல் பணிக்கு ரூ. 30 லட்சத்தில் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், மாற்றுத்திறனாளிகள் அலுவலக கட்டடம் சீரமைத்து சுகாதார வளாகம், நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அனைத்து சுகாதார வளாகங்களை சீரமைக்கவும், புதிதாக அமைக்கவும் ஏற்பாடு செய்துள்ளதாக அவா் தெரிவித்தாா்.