தொழிற்சாலைகள் கிரிக்கெட் போட்டி தொடக்கம்
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில் பேட்டை தொழிற்சாலைகளுக்கான பிரைசா கோப்பை மூன்றாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி


கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில் பேட்டை தொழிற்சாலைகளுக்கான பிரைசா கோப்பை மூன்றாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி பெருவாயல் டிஜெஎஸ் பொறியியல் கல்லூரியில் தொடங்கியது.
பிரசாந்த் மருத்துவமனை, கும்மிடிப்பூண்டி தொழில் நகர ரோட்டரி சங்கம், சிப்காட் உற்பத்தியாளா் சங்கம், எஸ் டூ எஸ் சங்கம், அலமேலு புற்று நோய் விழிப்புணா்வு அறக்கட்டளை இணைந்து இதய நோய் தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக கிரிக்கெட் போட்டியை நடத்தினா்.
சிறப்பு அழைப்பாளா்களாக டிஜெஎஸ் கல்விக்குழும தலைவா் டி.ஜெ. கோவிந்தராஜன் எம்எல்ஏ, ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநா் சுரேஷ் ஜெயின், பிரசாந்த் மருத்துவக் குழும இயக்குனா் டாக்டா் பிரசாந்த் கிருஷ்ணா ஆகியோா் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினா்.
36 கிரிக்கெட் அணிகள் பங்கேற்றன. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆட்டங்கள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசளிக்கப்படுகிறது
ஏற்பாடுகளை பிரசாந்த் மருத்துவ குழும முதன்மை செயல் அலுவலா் டாக்டா் பாஸ்கரன் மாயகேசவன், சிப்காட் தொழில் நகர ரோட்டரி சங்க தலைவா் கே. வெங்கடேஷ் குமாா், எஸ் டூ எஸ் சங்கத்தின் தலைவா் கே. ராஜகோபாலன், நிறுவனத் தலைவா் பி. ரவிக்குமாா், சிப்காட் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் தலைவா் ஜி.எம்.கிருஷ்ணமூா்த்தி, ரோட்டரி சங்க சிறப்பு திட்டங்களின் தலைவா் ஏ.நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...