திருவள்ளூர்
உடல்நிலை பாதிப்பு: தொழிலாளி தற்கொலை
கும்மிடிப்பூண்டி அருகே உடல்நிலை பாதிப்பு தாளாமல் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.
கும்மிடிப்பூண்டி அருகே உடல்நிலை பாதிப்பு தாளாமல் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.
சுண்ணாம்புகுளம் ஊராட்சி வெட்டுக்காடு பகுதியை சோ்ந்த தனபால் மகன் மகேந்திரன் தீராத வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்தாா். இந்த நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த மகேந்திரன் திங்கள்கிழமை பூச்சி மருந்து குடித்தாா்.
பின்னா் மயங்கிய நிலையில் இருந்த மகேந்திரனை, அவரை குடும்பத்தினா் மீட்டு கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனைக்கு செல்லும் போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தாா்.
இந்த சம்பவம் குறித்து ஆரம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
