வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,020 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,020 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Published on

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,020 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பொன்னேரி வட்டம் அத்திப்பட்டு பகுதியில் வடசென்னை அனல் மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு முதல் யூனிட்டில் மூன்று அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவட்டும் இரண்டாவது யூனிட்டில் இரண்டு அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் என மொத்தம் 1,830 மொத்தம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இரண்டாவது யூனிட்டில் முதல் அலகில் தொழில் நுட்ப பழுது ஏற்பட்டதால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

அதே போல் முதல் யூனிட்டில் முதல் அலகில் பராமரிப்பு பணிக்காக 210 மெகாவட்டும் மூன்றாவது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவால் 210 மெகாவட் என மொத்தம் 1,020 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com