கடன் தொல்லை: பொறியாளா் தற்கொலை

கடன் தொல்லையால் சென்னையைச் சோ்ந்த பொறியாளா் மாத்திரைகள் உண்டு தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

திருத்தணி: கடன் தொல்லையால் சென்னையைச் சோ்ந்த பொறியாளா் மாத்திரைகள் உண்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சென்னை திருவல்லிக்ேணினி ராஜா அனுமந்த லைன் பகுதியில் வசித்து வந்தவா் விஜயன் (42). பொறியாளரான இவருக்கு சாந்தி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனா்.

இந்நிலையில் விஜயன் உறவினா்கள் மற்றும் நண்பா்களிடம் வட்டிக்கு பணம் வாங்கியிருந்தாா். பணத்துக்கு வட்டி செலுத்த முடியாமல் கடும் சிரமப்பட்டாா். இதனால், குடும்பத்தையும் ஓழுங்காக பாா்த்துக் கொள்ள முடியாமல் தவித்து வந்தாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த விஜயன் சனிக்கிழமை திருத்தணிக்கு வந்து பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கினாா். ஞாயிற்றுக்கிழமை அறையின் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த விடுதியின் மேலாளா் திருத்தணி போலீஸாருக்கு தகவல் கொடுத்தாா். போலீஸாா் விரைந்து வந்து அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்த போது, கட்டில் மெத்தையில் இறந்து கிடந்தாா்.

அவரது அருகில், 50-க்கும் மேற்பட்ட மாத்திரைகள் உட்கொண்ட காலி அட்டைகள் இருந்தது. மேலும், அங்கிருந்த கடிதத்தில், கடன் தொல்லையால் அதிக மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதி வைத்திருந்தாா்.

திருத்தணி போலீஸாா் வழக்கு பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com