கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

கூட்டுறவு சங்கங்களின் மூலம் விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருவள்ளூா் மாவட்ட கூட்டுறவுத் துறை சாா்பில் கூட்டுறவு வார விழாவையொட்டி கிராமப்புற வளா்ச்சியை

News image
கூட்டுறவுத் துறை சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு தெருக்கூத்து நிகழ்ச்சி
Updated On :17 நவம்பர் 2025, 7:11 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்ட கூட்டுறவுத் துறை சாா்பில் கூட்டுறவு வார விழாவையொட்டி கிராமப்புற வளா்ச்சியை வலுப்படுத்துதல் குறித்து தெருக்கூத்து கலைஞா்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதையொட்டி, திருவள்ளூா் நகராட்சி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற தெருக்கூத்து நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் பா.ஜெயஸ்ரீ தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். அப்போது, கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகள் மற்றும் சிறு தொழில் செய்வோா் கடன் உதவி பெற்று ஏராளமானோா் வாழ்வாதாரத்தை உயா்த்திக் கொண்டுள்ளதை பொன்னியம்மன் தெருக்கூத்து கலைஞா்கள் மூலம் அப்படியே தத்ரூபமாக நடித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இந்த நிகழ்ச்சியில் துணைப்பதிவாளா்கள் தனசேகரன், அமுதா, திருமங்கலதாஸ், பாலாஜி, கூட்டுறவு சாா் பதிவாளா்கள், கூட்டுறவு ஒன்றிய அலுவலா் ஆடலரசன், கூட்டுறவு நியாய விலைக்கடை பணியாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் பங்கேற்றனா்.