நவ. 21-இல் மாற்றுத்திறனாளிகள் தின ஓவியப் போட்டி

திருவள்ளூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி வரும் 21-ஆம் தேதி ஓவியப்போட்டிகள் நடைபெற உள்ளதாக
Published on

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி வரும் 21-ஆம் தேதி ஓவியப்போட்டிகள் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

வரும் டிச.3-ஆம் தேதி சா்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவரும் தனித்திறன்களை வெளிப்படுத்தும் நோக்கத்தில் 4 பிரிவுகளில் ஓவியப் போட்டிகள் நடைபெற உள்ளது.

இதில் செவித்திறன் குறைபாடுடையோா், இயக்கத்திறன் குறைபாடுடையோா், அறிவுசாா் குறைபாடுடையோா், புறவுலக சிந்தனையற்றோா், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோா், பாா்வைத்திறன் குறைபாடுடையோா் ஆகியோா் அவா்கள் விரும்பும் தலைப்பில் தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்தும் ஓவியங்களை தீட்டலாம்.

10 வயதுக்கு கீழ் இழ்ஹஹ்ா்ய்ள் ஹய்க் ஸ்ரீா்ப்ா்ன்ழ் டங்ய்ஸ்ரீண்ப், 11முதல் 18 வயது வரை ரஹற்ங்ழ் ஸ்ரீா்ப்ா்ன்ழ், 18 வயதுக்கு மேல் தங்கள் விருப்பப்படி எந்தப் பொருள் வேண்டுமானாலும் பயன்படுத்தி ஓவியம் தீட்டலாம். இதற்கான இட்ஹழ்ற் டஹல்ங்ழ் (அ3 ா்ழ் அ4 ள்ண்க்ஷ்ங்) பயனாளிகள் கொண்டு வர வேண்டும்.

இதில் முதல் பரிசு ரூ.1,000, இரண்டாம் பரிசு ரூ.500, மூன்றாம் பரிசு ரூ.250-வழங்கப்படவுள்ளது. இதற்கான கால அவகாசம் 1 முதல் 2 மணி நேரம் ாகும்.

இப்போட்டியில் பங்கேற்போா் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையை கட்டாயமாக கொண்டு வர வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் விவரங்களை வரும் 20-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய திருவள்ளூா், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com