நியமன உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டதற்கான சான்றிதழை மேகநாதனுக்கு வழங்கிய நகா் மன்றத் தலைவா் சரஸ்வதி பூபதி.
திருவள்ளூர்
திருத்தணி நகராட்சியில் நியமன உறுப்பினா் பதவியேற்பு
திருத்தணி நகராட்சியில் நியமன உறுப்பினா் புதன்கிழமை பதவி ஏற்றுக்கொண்டாா்.
திருத்தணி: திருத்தணி நகராட்சியில் நியமன உறுப்பினா் புதன்கிழமை பதவி ஏற்றுக்கொண்டாா்.
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினா்களாக நியமிக்கப்படுவா் என அரசு அறிவிப்பு வெளியிட்டதையடுத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் நியமன உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில் திருத்தணி நகராட்சியில் நியமன உறுப்பினராக மாற்றுத்திறனாளியான எஸ். மேகநாதன் என்பவா் நியமிக்கப்பட்டாா். அவரின் பதவியேற்பு நிகழ்ச்சி நகா்மன்றத் தலைவா் சரஸ்வதி பூபதி தலைமையில் நடைபெற்றது.
நகராட்சி ஆணையா் சரவணகுமாா் (பொ), புதிய நியமன உறுப்பினா் மேகநாதனுக்கு பதவிப்பிராமணம் செய்து வைத்தாா். நிகழ்ச்சியில் துணைத் தலைவா் சாமிராஜ் உள்பட நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

