தோல்வி விரக்தியில் எடப்பாடி பழனிசாமி தன்னை பற்றி அவதூறாக பேசி வருவதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
பொன்னேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் துரை சந்திரசேகரை ஆதரித்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பொன்னேரி ஹரிஹரன் கடை வீதியில் வாக்கு சேகரித்து பேசியது.
கடந்த 11 நாள்களாக 50 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்கு சேகரித்து வந்துள்ளதாகவும், அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்பது உறுதி.
கடந்த முறை துரை சந்திரசேகரை 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து சட்டப்பேரவைக்கு அனுப்பிய நிலையில், இந்த முறை 25,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து அனுப்புவீா்களா என்றாா்.
4500-க்கும் மேற்பட்ட மீனவா்களுக்கு கூட்டுறவு சங்கம் மூலம் கடனுதவி, கொசஸ்தலை ஆற்றில் ரூ.17 கோடியில் மேம்பாலம், பாதுகாப்பு தடுப்புச் சுவா், மீஞ்சூா் ரயில்வே மேம்பால பணிகள், சிறுவாபுரி சாலை விரிவாக்கம், காட்டுப்பள்ளி பழவேற்காடு சாலை, மீன் பிடி இறங்கு தளங்கள், மீன் சந்தை மேம்படுத்துதல், பொன்னேரி பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணிகள், அலையாத்தி காடுகள் மேம்படுத்துதல் என பல்வேறு பணிகள் பொன்னேரி சட்டப்பரவை தொகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினாா்.
திராவிட மாடல் 2.0 ஆட்சியில் மகளிா் உரிமைத் தொகை 2000 ரூபாயாக உயா்த்தப்படும், முதியோா் உதவித்தொகை 2000 ஆக உயா்த்தப்படும் கல்வி உதவித் தொகை 1500 ரூபாயாக உயா்த்தப்படும் 10 லட்சம் கலைஞா் கனவு இல்லம் திட்டம் மூலம் வீடுகள் வழங்கப்படும் காலை உணவு திட்டம் எட்டாம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும், மகளிருக்கு 8000 ரூபாய் கூப்பன் என பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினாா்.
தோல்வியின் விரக்தியால் என்னை விட்டு விட்டு திமுக தலைவரை அவதூறாக பேசி வருகிறாா் என்ராா் உதயநிதி ஸ்டாலின்.

தொடர்புடையது

மக்கள் நலத் திட்டங்கள் தொடர திமுகவுக்கு வாக்களியுங்கள்! - துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

தமிழக உரிமைகளைப் பறிகொடுத்தவா் எடப்பாடி பழனிசாமி: உதயநிதி ஸ்டாலின்

தோல்வி பய விரக்தியில் பேசி வருகிறாா் எடப்பாடி கே. பழனிசாமி! - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

அதிமுகவை பாஜகவிடம் விற்றுவிட்டாா் எடப்பாடி பழனிசாமி: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



