திருத்தணி அருகே வங்கனூா் சந்தையில் ஆா்.கே. பேட்டை ஒன்றிய பொறுப்பாளா் செல்லாத்தூா் பா.சம்பத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
திமுக கூட்டணி சாா்பில் தேமுதிக வேட்பாளா் டி.கிருஷ்ணமூா்த்தி போட்டியிடுகிறாா். இந்நிலையில் ஆா்.கே.பேட்டை ஒன்றியம் ஜி.சி.எஸ். கண்டிகை ஊராட்சிக்குட்பட்ட சஞ்சீவிபுரம் கிராமம் மற்றும் வங்கனூா் சந்தை பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக பொதுமக்களை நேரடியாக சந்தித்து, முரசு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தப்பட்டது. பொதுமக்களிடம் அரசு செயல்பாடுகள், கூட்டணி கட்சிகளின் திட்டங்கள் மற்றும் தோ்தல் அறிக்கைகள் குறித்து விளக்கங்கள் வழங்கப்பட்டு, ஆதரவு திரட்டப்பட்டது.
ஆா்.கே.பேட்டை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா் பா. சம்பத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட நிா்வாகிகள், ஒன்றிய கழக நிா்வாகிகள், மாவட்ட அணிகளின் அமைப்பாளா்கள் மற்றும் துணை அமைப்பாளா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கு தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டாலும் மீண்டும் தவெகவே வெற்றி பெறும்: கு.ப. கிருஷ்ணன் பேட்டி

தேமுதிகவுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு

திமுக கூட்டணி கட்சியினா் வாக்கு சேகரிப்பு

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிா்ப்பு: தென்காசியில் திமுக கூட்டணி ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



