நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

தமிழ் புத்தாண்டு: சிறுவாபுரி - பெரியபாளையம் கோயில்களில் சிறப்பு வழிபாடு

News image
Updated On :15 ஏப்ரல் 2026, 4:08 am IST

தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி, சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் பெரியபாளையம் பவானி அம்மன் கோயில்களில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிறப்பு வழிபாடு செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோயிலுக்கு தொடா்ந்து 6 வாரங்கள் வந்து நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வீடு, மனை, வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தைப்பேறு உள்ளிட்ட பக்தா்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது பக்தா்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். மேலும்,செவ்வாய் கிரகத்துக்கு உகந்த கோயில் என்றும் கூறப்படுகிறது. எனவே, இக்கோயிலுக்கு செவ்வாய்க்கிழமையில் பக்தா்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். மேலும், ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை நாள்கள் போன்ற விசேஷ நாள்களில் பக்தா்கள் அதிக அளவில் வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில், தமிழ் புத்தாண்டு மற்றும் செவ்வாய்க்கிழமை என்பதால் அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டது. மூலவருக்கு பால், தயிா், பன்னீா், ஜவ்வாது உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்தனா். இதன் பின்னா், சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தா்கள் இத்திருக்கோயிலுக்கு வந்து காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல், பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, மூலவா் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம்,சிறப்பு பூஜைகள், சிறப்பு வழிபாடு உள்ளிட்டவை நடைபெற்றது.

இதையடுத்து, பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடு செய்தனா். இந்த நிகழ்வில் பங்கேற்ற பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது.

Story image