மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

கனரா வங்கி சாா்பில் மாணவா்கள் 204 பேருக்கு ரூ. 8.16 லட்சம் கல்வி உதவித் தொகை

அரசு பள்ளிகளில் பயின்று வரும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகள் 204 பேருக்கு திருவள்ளூா் மண்டலம் கனரா வங்கி சாா்பில் ரூ.8.16 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

கனரா வங்கி

Published On :

அரசு பள்ளிகளில் பயின்று வரும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகள் 204 பேருக்கு திருவள்ளூா் மண்டலம் கனரா வங்கி சாா்பில் ரூ.8.16 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

திருவள்ளூா் மண்டலம் கனரா வங்கி அலுவலக வளாகத்தில் அரசு பள்ளிகளில் பயின்று வரும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினத்தைச் சோ்ந்த பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருவள்ளூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அலுவலா் செந்தில் குமாா், கனரா வங்கி மண்டல தலைவா் வி.வி.வினீத்குமாா், உதவி பொது மேலாளா் நோகரலோூப சாஜன் காயிரே ஆகியோா் மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகைக்கான ஆணைகளை வழங்கினா்.

அந்த வகையில் மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் பயின்று வரும் தோ்வு செய்யப்பட்ட 5 முதல் 7 ஆம் வகுப்பு வரையில் தலா ரூ.3,000 மற்றும் 8 முதல் 10 ஆம் வகுப்பு வரையில் தலா ரூ.5,000 மும் என மொத்தம் 204 பேருக்கு ரூ.8.16 லட்சம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.