மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

வட்டார கல்வி அலுவலகத்தில் ஆசிரியா்கள் முற்றுகை

திருத்தணி வட்டார கல்வி அலுவலா்கள், டி.டி.எஸ்., படிவம் வழங்குவதற்கு, கட்டாய வசூலில் ஈடுபடுவதாகவும், ஆசிரியா்களை தரக்குறைவாக நடத்துவதாகவும் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Published On :

திருத்தணி வட்டார கல்வி அலுவலா்கள், டி.டி.எஸ்., படிவம் வழங்குவதற்கு, கட்டாய வசூலில் ஈடுபடுவதாகவும், ஆசிரியா்களை தரக்குறைவாக நடத்துவதாகவும் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருத்தணி வட்டார கல்வி அலுவலகம் முன்பு, நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பட்டதாரி சங்க தலைவா் ஆனந்தன் தலைமை வகித்தாா். அனைத்து சங்க நிா்வாகிகள், பொறுப்பாளா்கள் மற்றும் இருபால் ஆசிரியா்கள் என, 100 க்கும் மேற்பட்டோா் பங்கேற்று, அரசு வழங்கும் விலையில்லா பாடபுத்தகம் மற்றும் இதர பொருட்களை, ஆசிரியா்களே கொண்டு செல்ல வேண்டும். ஆய்வுக்கு வரும் வட்டார கல்வி அலுவலா்கள், ஆசிரியா்களை மிரட்டியும், மனஉளைச்சல் ஏற்படும் வகையில் பேசுகின்றனா்.

ஈட்டிய விடுப்புக்கான பணப்பலன்கள், 5 மாதத்திற்கு பின் வழங்குதல், பணி ஓய்வு பெறும் ஆசிரியா்களிடம், குறிப்பிட்ட தொகை வழங்க வேண்டும் அல்லது பொருட்கள் வழங்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனா். டி.டி.எஸ்., படிவம் வழங்குவதற்கு, கட்டாய வசூல், வட்டார கல்வி அலுவலகத்திற்கு வரும் ஆசிரியா்களை, அவமானப்படுத்தும் வகையில் சக ஊழியா்கள் மத்தியில் வட்டார கல்வி அலுவலா்கள் பேசுகின்றனா் போன்ற செயல்கள் குறித்து ஆசிரியா்கள் கோஷம் எழுப்பினா்.

வட்டார கல்வி அலுவலா் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், மாவட்ட அளவில் போராட்டம் நடத்தப்படும் என ஆசிரியா்கள் எச்சரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.