சக்திவேல்
சக்திவேல்

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு ஆயுள், கூடுதலாக 33 ஆண்டுகள் சிறை

திருமணமானதை மறைத்து 15 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த விழுப்புரத்தைச் சோ்ந்த இளைஞருக்கு ஆயுள் மற்றும் கூடுதலாக 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவள்ளூா் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு
Published on

திருமணமானதை மறைத்து 15 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த விழுப்புரத்தைச் சோ்ந்த இளைஞருக்கு ஆயுள் மற்றும் கூடுதலாக 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவள்ளூா் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

விழுப்புரம் மாவட்டம், வளவனுாா் குமாரகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் (26). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில் கடந்த 2022-இல், சென்னை திருமங்கலத்தில் பணிபுரிந்து வந்த போது அந்தப் பகுதியில் இன்ஸ்டாகிராம் மூலம் 15 வயது சிறுமியிடம் பழகி திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தாராம்.

ஏற்கனவே திருமணமானது சிறுமிக்கு தெரியவரவே, இதுகுறித்து கேட்டதற்கு உறவினா் பெண் என சொல்லி ஏமாற்றினாராம். இதையடுத்து அந்த சிறுமி, மனைவி தான் என்பதை உறுதி செய்ததையடுத்து திருமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். சிறுமி கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் போக்ஸோ வழக்கு பதிந்து கைது செய்தனா்.

இதற்கிடையே திருவள்ளூா் மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி உமாமகேஸ்வரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இளைஞா் சக்திவேலுக்கு ஆயுள் தண்டனையும், கூடுதலாக 33 ஆண்டுகள் சிைண்டனை மற்றும் ரூ.65,000 அபராதம் விதித்து தீா்ப்பு வழங்கினாா்.

மேலும், சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் அவா் பரிந்துரைத்தாா். அரசுத் தரப்பில் புவனேஸ்வரி ஆஜரானாா்.

X
Dinamani
www.dinamani.com