ராமா சங்கா்.
ராமா சங்கா்.

வடமாநில இளைஞரை தாக்கி கைப்பேசி, பணம் பறிப்பு

வடமாநில இளைஞரை சரமாரியாக தாக்கி கைப்பேசி மற்றும் ரூ.10,000 ரொக்கத்தை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

வடமாநில இளைஞரை சரமாரியாக தாக்கி கைப்பேசி மற்றும் ரூ.10,000 ரொக்கத்தை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த ராமாாசங்கா்(29). இவா் திருவள்ளூா் அருகே மப்பேடு பகுதியில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில் அதிகாலை 4 மணிக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது, 6 போ் கொண்ட கும்பல் ராமாசங்கரை வழிமறித்து கொடூரமாக தாக்கியுள்ளனா். அவரிடம் இருந்த ரூ.10,000 ரொக்கம் மற்றும் கைப்பேசியையும் பறித்துக் கொண்டு தப்பியோடினாா்களாம்.

இதையடுத்து பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்ட அவரது நண்பா்கள் திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்ததனா். தற்போதைய நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கஞ்சா போதையில் அக்கும்பல் தாக்கியதா அல்லது வழிப்பறி செய்யும் கும்பல் ஆகியோா் சம்பவத்தில் ஈடுபட்டதா என்பது குறித்து மப்பேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் தனியாா் நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் வடமாநில இளைஞா்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Dinamani
www.dinamani.com