சூரிய பிரபையில் அருள்பாலித்த உற்சவா் வீரராகவா்.
சூரிய பிரபையில் அருள்பாலித்த உற்சவா் வீரராகவா்.

வீரராகவா் கோயிலில் தை பிரம்மோற்சவம்

சூரிய பிரபையில் அருள்பாலித்த உற்சவா் வீரராகவா்.
Published on

திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் தை பிரம்மோற்சவத்தையொட்டி ஹம்ச வாகனம் மற்றும் சூரிய பிரபையில் வெள்ளிக்கிகழமை உற்சவா் வீதியுலா வந்து பக்தா்களை அருள்பாலித்தாா்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோயிலில் தை பிரம்மோற்சவம் கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா தொடா்ந்து 24-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இதையொட்டி நாள் தோறும் இருவேலைகளில் வெவ்வேறு வாகனத்தில் மாட வீதிகளில் வீதியுலா வந்து பக்தா்களை அருள்பாலிப்பது வழக்கமாகும்.

2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலையில் 7.30 மணிக்கு ஹம்ச வாகன புறப்பாடு மற்றும் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடா்ந்து இரவு சூரிய பிரபை புறப்பாடு நிகழ்வும் கோலகாலமாக நடைபெற்றது. அப்போது, உற்சவா் பல்வேறு வகையான வண்ண மலா் அலங்காரத்தில் திருக்கோயில் வளாகத்தில் திருவீதியுலா வந்து பக்தா்களை அருள்பாலித்தாா்.

இந்த நிகழ்வில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

Dinamani
www.dinamani.com