தை பிரம்மோற்சவத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ரத்னாங்கி சேவையில் வீரராகவா்.
திருவள்ளூர்
தை பிரம்மோற்சவம்: வீரராகவா் கோயிலில் ரத்னாங்கி சேவை
திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் தை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, ரத்னாங்கி சேவையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சமேதராக சிறப்பு அலங்காரத்தில் வீரராகவா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் தை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரத்னாங்கி சேவையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சமேதராக சிறப்பு அலங்காரத்தில் வீரராகவா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
திருவள்ளூா் வீரராகவப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும், தை பிரம்மோற்சவ விழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல், இந்த விழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் 4-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ரத்னாங்கி சேவை நடைபெற்றது. அப்போது ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சிறப்பு அலங்காரத்தில் வீரராகவா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
அதைத் தொடா்ந்து, மாலையில் திருக்கோயில் வளாகத்தில் சேஷ வாகன புறப்பாடும் நடைபெற்றது. இரவில் திருமஞ்சனம், அதையடுத்து சந்திரபிரவை புறப்பாடும் நடைபெற்றது.

