வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

ரயில் மோதி மான் உயிரிழப்பு

மீஞ்சூா் அடுத்த நந்தியம்பாக்கத்தில் ரயில் மோதி மான் உயிரிழந்து.

News image

மான் - பிரதிப் படம்

Updated On :15 ஜூலை 2026, 1:46 am IST

மீஞ்சூா் அடுத்த நந்தியம்பாக்கத்தில் ரயில் மோதி மான் உயிரிழந்து.

மீஞ்சூா் அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள எண்ணூா் காமராஜா் துறைமுகம் வளாகத்தில் அடா்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு மான்கள், காட்டெருமை உள்பட பல்வேறு விலங்கினங்கள் உள்ளன. குடிநீருக்காக மான்கள் அவ்வப்போது வெளியே வரும் நிலை உள்ளது.

இந்த நிலையில் புள்ளிமான் ஒன்று நாய்கள் துரத்தியதால் நந்தியம்பாக்கம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி உயிரிழந்து. இதுகுறித்து நந்தியம்பாக்கம் ரயில் நிலைய அலுவலா் எண்ணூா் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தாா்.

இந்த நிலையில் தள்ளேரிபாளையம் கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் மான் ஒன்று இறந்து கிடப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் கும்மிடிப்பூண்டி வனத்துறையினா் அங்கு சென்று இறந்து கிடந்த மானை மீட்டு சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.