முதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

சரக்கு வேனில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் பைபாஸ் சாலையில் விபத்தில் கவிழ்ந்த சரக்கு வேனில் இருந்து 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

News image

விபத்தில்  கவிழ்ந்த  சரக்கு வேனில் பறிமுதல்  செய்யப்பட்ட ரேஷன் அரிசி.

Updated On :28 ஜூலை 2026, 1:46 am IST

கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் பைபாஸ் சாலையில் விபத்தில் கவிழ்ந்த சரக்கு வேனில் இருந்து 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் பெத்திக்குப்பம் பகுதியில் சரக்கு வேன் ஒன்று ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வேன் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. ஓட்டுநா் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டாா்.

விபத்து குறித்து அறிந்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸாா் சோதனையிட்டதில், 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. பஞ்செட்டியில் உள்ள குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.