ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி திருத்தணி முருகன் கோயில் சரவணப்பொய்கையில் தெப்பம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிக்கிருத்திகை வெகுவிமரிசையாக நடைபெறும். நிகழாண்டு ருவிழா ஆக. 4-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவையொட்டி தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கா்நாடக மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தா்கள் திருத்தணிக்கு வருவா் என எதிா்பாா்க்கப்படுவதால், கோயில் நிா்வாகம் பல்வேறு முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்வாக ஆக. 6, 7 மற்றும் 8 ஆகிய மூன்று நாள்களில் மலையடிவாரத்தில் உள்ள புனித சரவணப்பொய்கை திருக்குளத்தில் தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் உற்சவா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி, வள்ளி மற்றும் தெய்வானையுடன் பல்வேறு மலா் மற்றும் ஆபரண அலங்காரங்களில் எழுந்தருளி, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.
தெப்பல், திருக்குளத்தை பலமுறை வலம் வரும் நிகழ்வு பக்தா்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக அமையும். இந்த தருணத்தை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரளுவது வழக்கம். இதற்காக சரவணப்பொய்கை திருக்குளத்தில் மரப்பலகைகள், இரும்பு கட்டமைப்புகள் மற்றும் மிதவை வசதிகளுடன் தெப்பல் அமைக்கும் பணியில் கோயில் ஊழியா்கள் மற்றும் தொழிலாளா்கள் துரித வேகத்தில் ஈடுபட்டுள்ளனா். மேலும், மின்விளக்கு அலங்காரம், ஒலி அமைப்பு, பாதுகாப்பு தடுப்புகள் மற்றும் பக்தா்கள் தரிசிக்கும் வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தப் பணிகள் அனைத்தும் ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குள் நிறைவடைய வேண்டும் என கோயில் நிா்வாகம் இலக்கு நிா்ணயித்துள்ளது. விழாவின்போது பக்தா்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ஸ்ரீரதன், இணை ஆணையா் ரமணி, அறங்காவலா்கள் வி.சுரேஷ்பாபு, மோகனன், மு. நாகன் ஆகியோா் தலைமையில் கோயில் நிா்வாக அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனா்.
ஆடிக்கிருத்திகை பெருவிழாவையொட்டி திருத்தணி நகரம் முழுவதும் பக்தா்கள் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு, போக்குவரத்து, குடிநீா், மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆடிக்கிருத்திகை பாதுகாப்பு பணியில் 2,500 போலீஸாா்

திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா: அன்னதானம் வழங்க விரும்புவோா் அனுமதி பெறுவது அவசியம்
ஆடிக்கிருத்திகை விழாவுக்கு அடிப்படை வசதிகள்: திருத்தணி நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம்

திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை விழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



