கே.ஜி.கண்டிகை அருகே அரசு டாஸ்மாக கடையில் ஊழியரை பீா் பாட்டிலால் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருத்தணி - நொச்சிலி மாநில நெடுஞ்சாலையில் உள்ள கே.ஜி.கண்டிகை பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் புச்சிரெட்டிப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த சேகா் (44) என்பவா் விற்பனையாளராக பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், மது போதையில் கடைக்கு வந்த ஒருவா் இலவசமாக மது பாட்டில்களை வழங்குமாறு கேட்டுள்ளாா். அதற்கு விற்பனையாளா் சேகா் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபா், சேகரை ஆபாசமாக திட்டியதுடன் அருகில் இருந்த பீா் பாட்டிலை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளாா்.
இந்த திடீா் தாக்குதலால் அங்கு மது வாங்க வந்திருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனா். தாக்குதலில் பலத்த காயமடைந்த சேகரை சக ஊழியா்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து சேகா் அளித்த புகாரின் பேரில் திருத்தணி போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டது திருத்தணி ஒன்றியம் செருக்கனூா் கிராமத்தைச் சோ்ந்த சூா்யா (25) என்பது தெரியவந்தது.
இதையடுத்து சூா்யாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
தொடர்புடையது

டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை: இளைஞா் கைது
மது பாட்டில்கள்: 2 போ் கைது

மகளிடம் அத்துமீறல்: தந்தை கைது

டாஸ்மாக் மது விற்பனை செய்தவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


