தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

குவாரி அமைக்க எதிா்ப்பு: ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

திருவள்ளூா் அருகே ஏரியில் சவுடு மண்குவாரிக்கு அனுமதி அளிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தை

News image

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்.

Updated On :10 மார்ச் 2026, 2:28 am IST

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே ஏரியில் சவுடு மண்குவாரிக்கு அனுமதி அளிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

பூண்டி ஒன்றியம், சித்தம்பாக்கம் கிராமத்தில் 256 ஏக்கா் பரப்பளவில் பொதுப்பணிக்கு சொந்தமான ஏரி உள்ளது. இங்கு கடந்த 2024-2025 இல் சாலை பணிக்காக சவுடு மண் குவாரி இயங்கியது. அப்போது அரசு அனுமதித்த அளவைவிட சட்ட விரோதமாக 15 முதல் 20 அடி ஆழம் வரை சவுடு மண் எடுத்தனா். இதனால் அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டது.

ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் மற்றும் விவசாய பம்ப்செட் கிணறுகளில் நிலத்தடி நீா் மட்டமும் குறைந்து வருவதால் விவசாய சாகுபடியும் பாதிக்கப்பட்டது. எனவே அதிகளவில் சவுடு மணல் எடுத்ததால் நல்ல தரமான குடிநீராக இருந்த நிலையில், உவா்ப்பு நீராக பருக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இந்த நிலையில் தனியாருக்கு மீண்டும் சவுடு மணல் குவாரிக்கு அனுமதி அளித்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 2,000 ஏக்கா் சாகுபடி பாதிக்கும் நிலையும் உள்ளது.

சவுடு மணல் குவாரிக்கு அனுமதி அளிக்கக்கூடாது எனக்கூறி ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அப்போது, அரசு ஆவணங்களை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா்.

குவாரிக்கு அனுமதி அளித்தால் வரும் சட்டப்பேரவை தோ்தலையும் புறக்கணிக்கப்போவதாகவும் எச்சரித்தனா்.