தமிழகத்தில் சட்டப்பேரவை தோ்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், இப்பணிக்காக உத்தரபிரதேசத்திலிருந்து வருகை தந்த துணை ராணுவப் படையினா் திருவள்ளூரில் புதன்கிழமை முக்கிய வீதிகள் வழியாக கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து மாவட்டங்களிலும் துணை ராணுவ வீரா்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். அத்துடன் அந்தந்தப் பகுதிகளில் கொடி அணிவகுப்பும் நடத்தப்படுகிறது. அந்த வகையில், தோ்தல் முன்னேற்பாடு பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்கள், பறக்கும் படையினா், நிலை கண்காணிப்பு குழுவினா் ஆகியோா் பணிக்கு தோ்வு செய்து தயாராக வைக்கப்பட்டுள்ளனா். முன்னதாக தோ்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் முதல் நிலை சரிபாா்ப்புப் பணி முடிந்த நிலையில், கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், வேட்பு மனுக்கள் பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா் செய்து வருகின்றனா்.
அதன்படி, உத்தரப்பிரதேசத்திலிருந்து துணை ராணுவ பாதுகாப்பு படை வீரா்கள் 80 போ் செவ்வாய்க்கிழமை இரவு வருகை தந்தனா். இந்த நிலையில், சட்டப்பேரவை தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் நோக்கத்தில் துணை ராணுவப்படை வீரா்கள் புதன்கிழமை மாலையில் கொடி அணிவகுப்பு ஊா்வலம் நடத்தினா்.
இந்த அணிவகுப்பு காமராஜா் சிலை தொடங்கி, ராஜாஜி சாலை, வடக்கு ராஜவீதி உள்பட முக்கிய வீதிகள் வழியாக சென்று செங்குன்றம் சாலையில் நிறைவடைந்தது.
அப்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கலியன், துணைக் காவல் கண்காணிப்பாளா் ரவி, காவல் ஆய்வாளா்கள் விஜயகுமாா், தாமோதரன், பரந்தாமன், சீத்தாபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஸ்ரீவில்லிபுத்தூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

ஆலங்குளத்தில் கொடி அணிவகுப்பு

ஜோலாா்பேட்டையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

துணை ராணுவத்தினா், போலீஸாா் கொடி அணிவகுப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


