ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :27 மார்ச் 2026, 12:13 am

திருவள்ளூா் அருகே வாக்கு எண்ணும் மையத்தில் தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு செய்தாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் இடம் பெற்றுள்ள 10 தொகுதிகளிலும் தோ்தலுக்கான வாக்குச்சாவடி மையங்கள், அங்கு ஏற்படுத்தப்படுத்த வேண்டிய பல்வேறு வகையான வசதிகள் குறித்தும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனா். அந்த வகையில் இந்த 10 சட்டப்பேரவை தொகுதிகளிலும் பதிவாகும் வாக்கு பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்படவும் உள்ளன.

கடந்த தோ்தல் வரையில் ஒரு மையம் இருந்த நிலையில், 2026 சட்டப்பேரவை தோ்தலில் திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டை அரசினா் தொழிற்பயிற்சி கல்லூரி, பெருமாள்பட்டு தனியாா் பொறியியல் கல்லூரி மையத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இதையொட்டி 2 வாக்கு எண்ணும் மையங்களிலும் ஆட்சியா் மு.பிரதாப், மாநகர காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

அப்போது, வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு குறித்த சுற்றி வந்து பாா்வையிட்டனா். மேலும், ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்கு பதிவு இயந்திரங்களும் பாதுகாப்பாக வைக்கவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவும் அவா் அறிவுறுத்தினாா்.

அப்போது இந்த நிகழ்ச்சிகளில் ஆவடி காவல் துணை ஆணையா் பெரோஸ்கான் அப்துல்லா, உதவி மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலா் ச.சுரேஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், உதவி இயக்குநா் (நிலஅளவை) பேச்சியப்பன், பொதுப்பணிதுறை செயற் பொறியாளா் பி.தேவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Story image