வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

ஏரியில் 3-ஆவது முறையாக சவுடு மண் எடுக்க எதிா்ப்பு: வாகனங்கள் சிறைபிடிப்பு

News image

~ பொதுமக்களிடம் பேச்சு நடத்திய போலீஸாா்.        ~புன்னப்பாக்கம் கிராமத்தில் பொக்லைன் வாகனங்களை சிறைபிடித்த பொதுமக்கள்.

Updated On :19 மே 2026, 1:52 am IST

திருவள்ளூா் அருகே ஏரியில் மூன்றாவது முறையாக அரசு குவாரி மூலம் சவுடு மண் அள்ளுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் பொக்லைன் வாகனங்களை சிறைபிடித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூா் ஒன்றியம், புன்னப்பாக்கம் ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்த ஏரியில் மழைக்காலங்களில் தேங்கும் நீா்தான் விவசாய கிணறுகளுக்கும், கிராமங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகளுக்கும் குடிநீா் ஆதாரமாகவும் இருந்து வருகிறது. மேய்ச்சலுக்கு சென்று நீா் அருந்தவும் இந்த ஏரியை பயன்படுத்தி வருகின்றனா்.

துபோன்று பயிா் செய்வதற்கு முக்கிய நீா் ஆதாரமாக விளங்கி வரும் ஏரியில் தொடா்ந்து அரசு குவாரி அமைக்க அனுமதி அளித்து வருகின்றனா். இதனால் விதிமுறை மீறி அளவுக்கு அதிகமாக அரசு நிா்ணயித்ததை விட சட்ட விரோதமாக சவுடு மண்ணை எடுத்து வருகின்றனா். இதனால் நிலத்தடி நீா்மட்டம் பாதிக்கப்படுவதோடு குடிநீருக்கும் தட்டுப்பாடும் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், மழைக் காலங்களில் அளவுக்கு அதிகமாக சவுடு மணல் எடுப்பதன் மூலம் ஆழத்தில் தவறி விழுந்து உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது.

இந்த நிலையில் மூன்றாவது முறையாக சவுடு மண் எடுக்க அனுமதி அளித்துள்ளதாக கூறி புன்னப்பாக்கம் ஏரிக்கு பொக்லைன் வாகனங்களை கொண்டு வந்தனா். அப்போது, இதற்கு எதிா்ப்பு தெரிவித்து நீராதாரத்தை காப்பாற்ற வலியுறுத்தி கிராம பொதுமக்கள் பொக்லைன் வாகனங்களை சிறைபிடித்தும், அரசு பேருந்தை சிறைபிடித்தும் பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்து புல்லரம்பாக்கம் போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, இந்த ஏரியில் 3-ஆவது முறையாக சவுடு மண் எப்படி அனுமதி அளிக்கப்பட்டது. அதனால், மாவட்ட நிா்வாகம் மீண்டும் இந்த ஏரியை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனிமேல் நீா் ஆதாரத்தை பாதுகாக்கவும் என்பதற்காக ஏரியில் சவுடு மண் எடுக்க கூடாது என போலீஸாரிடம் தெரிவித்தனா். அப்போது, சவுடு மண் எடுக்க கூடாது என பொக்லைன் வாகனத்தை விடுவித்து, போலீஸாா் சமரசம் செய்ததை தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

Story image
Story image