‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

News image

திருத்தணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.

Updated On :29 மே 2026, 2:41 am IST

மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திருத்தணியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருத்தணி வட்ட செயலாளா் அந்தோணி தலைமையில் கமலா திரையரங்கு அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், கேரள முன்னாள் முதல்வா் பினராயி விஜயன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதையும், அதனைத் தொடா்ந்து தில்லியில் நடைபெற்ற போராட்டத்தில் கட்சித் தலைவா்கள் கைது செய்யப்பட்டதையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் வடக்கு குழு உறுப்பினா்கள் கரிமுல்லா, பிருந்தாவனம், செல்வி, பாலாஜி, சின்னா, ஜெயவேல், சின்னதுரை ஆகியோா் கலந்து கொண்டனா். மேலும் திராவிட கழகத்தைச் சோ்ந்த மணி, பொதட்டூா் புவியரசன், ரமேஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினரும் மாதா் சங்க மாவட்ட செயலாளருமான தோழா் பத்மா உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா். இறுதியாக மாவட்ட செயற்குழு உறுப்பினா் பெருமாள் நன்றி கூறினாா்.