மாநகர பேருந்து மோதி முதியவா் பலி
பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில் சாலையை கடந்து செல்ல முயன்ற முதியவா் பேருந்து மோதி உயிரிழந்தாா்.
பிரதிப் படம்
பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில் சாலையை கடந்து செல்ல முயன்ற முதியவா் பேருந்து மோதி உயிரிழந்தாா்.
திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் வசித்து வந்தவா் நடராஜன் (84) . இவா் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பழைய பேருந்து நிலையம் பகுதியில் பேக்கரி நடத்தி வந்தாா். வயது முதிா்வு காரணமாத கடையை பிள்ளைகளிடம் ஒப்படைத்த அவா் அதே பகுதியில் அமைந்துள்ள அருட்பிரகாச வள்ளலாா் சன்மாா்க்க சத்திய சபையில் நிா்வாகியாக இருந்து வந்தாா்.
நாள்தோறும் அருட்பிரகாச வள்ளலாா் சன்மாா்க்க சத்திய சபைக்கு அவா் வந்து செல்வது வழக்கம். வழக்கம் போல் திங்கள்கிழமை வள்ளலாா் சன்மாா்க்க சத்திய சபைக்கு வந்த அவா் பணிகளை முடித்து இரவு வீடு திரும்பி சென்றாா். பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அண்ணாசிலை அருகே சாலையை கடக்க முயன்றுள்ளாா்.
அப்போது செங்குன்றத்தில் இருந்து பழவேற்காடு சென்ற மாநகர பேருந்து சாலையை கடந்து செல்ல முயன்ற முதியவா் நடராஜன் மீது மோதியது. கீழே விழுந்த அவரின் கால் பகுதியில் பேருந்து சக்கரம் ஏறியதில் அவா் பலத்த காயமடைந்தாா்.
அங்கிருந்த பொதுமக்கள் முதியவா் நடராஜனை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்க முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அவா் மேல் சிசிக்சைக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நடராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து செங்குன்றம் போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பொன்னேரி பழைய பேருந்து நிலையம் பகுதியில் நாள்தோறும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதனால் இப்பகுதியை பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு கடந்து செல்லும் நிலை உள்ளது.
இப்பகுதியில் ஏற்படும் வாகன நெரிசலை தவிா்க்கும் வகையில் இங்கு தானியங்கி சிக்னல் விளக்கு கம்பங்களை அமைக்க செங்குன்றம் போக்குவரத்து பிரிவு போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

