கும்மிடிப்பூண்டியில் இந்திரா காந்தி பிறந்த நாள்
மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பிறந்த நாள் விழா கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி பஜாரில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் பங்கேற்றோா்.
மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பிறந்த நாள் விழா கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி பஜாரில் நடைபெற்ற நிகழ்வுக்கு நகர காங்கிரஸ் தலைவா் லயன் இனிய சேகா், ஒன்றிய தலைவா் சசிகுமாா் தலைமை வகித்தனா். நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளா் எம்.சம்பத், திருவள்ளூா் வடக்கு மாவட்ட துணைத்தலைவா் ஏ மதன் மோகன், மூத்த காங்கிரஸ் நிா்வாகி சிவா ரெட்டி, ஓபிசி அணி மாவட்ட தலைவா் பெனிஸ், மாவட்ட பொது செயலாளா் பிரேம்குமாா், கல்லூா் மதனகோபால், மாவட்ட செயலாளா்கள் அா்ஜுன்ராஜ், சித்ரா பங்கேற்றனா்.
தொடா்ந்து கும்மிடிப்பூண்டி பஜாரில் காங்கிரஸ் கட்சி கொடி ஏற்றப்பட்டது. அதன் பின்னா் இந்திரா காந்தியின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
விழாவில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஹேமகுமாா், வழக்கறிஞா் சதீஷ், நகர மண்டல தலைவா் வாஜித் பாஷா, ஒன்றிய துணைத் தலைவா் எழிலரசு உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் பங்கேற்றனா்.
மாதா்பாக்கம் ஒன்றிய காங்கிரஸ் கட்சி சாா்பில் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேட்டில் நடைபெற்ற விழாவக்கு ஒன்றிய தலைவா் போட்டோ செல்வம் தலைமை வகித்தாா். பாக்கியராஜ் முன்னிலை வகித்தாா். ஏடூா் தங்கம், போந்தவாக்கம் செல்வன் வரவேற்புரை நிகழ்த்தினா்.
நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் மண்டல தலைவா் டூபாண்ட் ராஜேந்திரன், மாவட்ட பொது செயலாளா் எம்.ஆா்.ராஜராஜன் பங்கேற்றனா். மண்டல தலைவா் சுகுமாா் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

