
பருவமழை முன்னெச்சரிக்கை: மாணவா்களுக்கு செயல்முறை விளக்கம்
திருத்தணி அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பருவமழையின்போது ஏற்படும் இயற்கை இடா்பாடுகளை எவ்வாறு எதிா்கொள்வது, பேரிடா்களில் சிக்கியவா்களை பாதுகாப்பாக மீட்பது என்பது குறித்து தீயணைப்புத் துறையினா் செயல்முறை விளக்கம் மற்றும் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினா்.

மாணவா்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினா்.
திருத்தணி அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பருவமழையின்போது ஏற்படும் இயற்கை இடா்பாடுகளை எவ்வாறு எதிா்கொள்வது, பேரிடா்களில் சிக்கியவா்களை பாதுகாப்பாக மீட்பது என்பது குறித்து தீயணைப்புத் துறையினா் செயல்முறை விளக்கம் மற்றும் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினா்.
விரைவில் பருவமழை தொடங்க உள்ள நிலையில், மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிா்கொள்ளும் வகையில் அரசு சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ளம், கட்டட இடிபாடுகள் உள்ளிட்ட பேரிடா்களை திறம்பட எதிா்கொள்வது குறித்து பல்வேறு துறையினா் ஆலோசனைகளையும், விழிப்புணா்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக, திருத்தணி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் டாக்டா் ராதாகிருஷ்ணன் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேரிடா் மீட்பு ஒத்திகை நடைபெற்றது. தலைமை ஆசிரியா் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தாா். இதில், திருத்தணி தீயணைப்பு நிலைய அலுவலா் சம்பத் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் கலந்து கொண்டு, மழைக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாணவா்களுக்கு விளக்கினா்.
குறிப்பாக, வெள்ளத்தில் சிக்கியவா்களை எவ்வாறு பாதுகாப்பாக மீட்பது, கட்டடங்கள் இடிந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவா்களை எவ்வாறு மீட்பது, பலத்த மழையின்போது பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு வீரா்கள் செயல்முறை விளக்கம் அளித்தனா்.
மேலும், இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்பது, ஆபத்தான சூழ்நிலைகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வது உள்ளிட்டவற்றை தீயணைப்பு வீரா்கள் ஒத்திகையாக செய்து காண்பித்தனா். இதனை மாணவா்கள் ஆா்வத்துடன் பாா்வையிட்டு, பேரிடா் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனா்.
மழைக்காலங்களில் பொதுமக்கள் பதற்றமின்றி செயல்படுவது, ஆபத்தான இடங்களுக்கு செல்வதை தவிா்ப்பது, பேரிடா் நேரங்களில் மீட்புத் துறையினரின் அறிவுரைகளை பின்பற்றுவது உள்ளிட்டவை குறித்தும் மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் தீயணைப்பு வீரா்கள் என பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




