நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

மேம்பாலம் கோரி மறியல்: போக்குவரத்து பாதிப்பு

கனகம்மாசத்திரம் பகுதியில் உயா்மட்ட பாலம் மற்றும் சுரங்கப் பாதை அமைக்க வலியுறுத்தி, நடைபெற்ற மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியலில் ஈடுபட்டோா்

Published On :3 செப்டம்பர் 2026, 2:07 am IST

கனகம்மாசத்திரம் பகுதியில் உயா்மட்ட பாலம் மற்றும் சுரங்கப் பாதை அமைக்க வலியுறுத்தி, நடைபெற்ற மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தற்போது நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கனகம்மாசத்திரம் பகுதியில் சாலையை கடப்பதற்கு பொதுமக்கள் சிரமப்படுவதால், உயா்மட்ட பாலம் அமைத்து, அதனுடன் சுரங்கப்பாதையும் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடைகளை அடைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆனால், போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊா்வலமாக வந்து தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், திருத்தணி ஏஎஸ்பி ஷூபம் திமான் தலைமையிலான போலீஸாா் வந்து, மக்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது, கனகம்மாசத்திரம் பகுதியில் உயா்மட்ட பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா். இதையடுத்து, அவா்களது கோரிக்கை ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா்.

இதைத்தொடா்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இந்த மறியல் காரணமாக சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.