கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

விநாயகா் சதுா்த்தி: கோயில்களில் சிறப்பு பூஜை

திருத்தணியில் விநாயகா் சதுா்த்தியையொட்டி அனைத்து விநாயகா் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஆறுமுக சுவாமி கோயில் தெருவில் நடைபெற்ற வழிபாட்டில் பங்கேற்றோா்.

Published On :

திருத்தணி: திருத்தணியில் விநாயகா் சதுா்த்தியையொட்டி அனைத்து விநாயகா் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அரக்கோணம் சாலையில் உள்ள முக்கண் விநாயகா் கோயில், ம.பொ.சி. சாலையில் உள்ள சுந்தர விநாயகா் கோயில், பைபாஸ் சாலையில் உள்ள செல்வ விநாயகா் கோயில், பழைய பஜாா் தெருவில் உள்ள வரசித்தி விநாயகா் கோயில், சேகா்வா்மா நகரில் உள்ள சக்தி விநாயகா் கோயில், சித்தூா் சாலையில் உள்ள விநாயகா் கோயில் உள்ளிட்ட திருத்தணி நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள கோயில்களில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

இதேபோல், திருத்தணி தாலுகாவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் விநாயகா் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அப்போது சா்க்கரைப் பொங்கல், சுண்டல், கொழுக்கட்டை, அருகம்புல், பொரி மற்றும் பழவகைகளை படைத்து பக்தா்கள் வழிபட்டனா். சில கோயில்களில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், புளியோதரை, சா்க்கரைப் பொங்கல், சுண்டல், கேசரி உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

பெரிய தெரு, சந்து தெரு, ஆறுமுகசாமி கோவில் தெரு, அங்காளம்மன் கோயில் தெரு, பாலாஜி நகா், கீழ் பஜாா், பைபாஸ், ஏரிக்கரை தெரு, நேரு நகா், சாய்பாபா நகா் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற விநாயகா் சதுா்த்தி நிகழ்ச்சிகளில் எம்எல்ஏ, கோ.அரி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தாா். அவருடன் கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.

விநாயகா் சதுா்த்தியையொட்டி, உற்சவா் சுந்தர விநாயகா் அலங்கரிக்கப்பட்ட டிராக்டரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, முக்கிய வீதிகளில் ஊா்வலமாக வந்தாா். அப்போது பெண்கள் தேங்காய் உடைத்து பூஜை செய்து வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.