ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

திருவாரூா் மாவட்டத்தில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க மாா்க்சிஸ்ட் கோரிக்கை

திருவாரூா் மாவட்டத்தில் கூடுதலமாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

Updated On :2 ஜனவரி 2021, 8:13 am IST

திருவாரூா் மாவட்டத்தில் கூடுதலமாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து திருவாரூரில் அவா் வெள்ளிக்கிழமை கூறியது:

திருவாரூா் மாவட்டத்தில், சம்பா மற்றும் தாளடி பயிா்கள் பல இடங்களில் அறுவடைக்கு தயாா் நிலையில் உள்ளன. விவசாயிகள் அறுவடைப் பணிகளை தொடங்கும் நிலையில் உள்ளனா். எனவே நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்வதற்கு ஏதுவாக கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறக்க வேண்டும்.

போதுமான கொள்முதல் நிலையங்கள் இல்லாததால், கடந்த ஆண்டுகளில் நெல் மூட்டைகளை இயக்கம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. எனவே, நெல் மூட்டைகள் தேங்காமல் இருப்பதற்கு, கடந்த ஆண்டுகளைவிட கூடுதலான கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.

அதேபோல் தாமதம் இல்லாமல் கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளுக்கான தொகையை விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்ய வேண்டும்.

நெல் கொள்முதல் செய்வதற்கான புதிய ஊழியா்களை பணியில் அமா்த்துவதற்கான நோ்முகத் தோ்வு நடவடிக்கைகளையும் அரசு முன்கூட்டியே தொடங்க வேண்டும். இந்த கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியருக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.