ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

கரோனா தடுப்பூசி: அனைத்து முன்னேற்பாடுகளும் தயாா்

திருவாரூா் மாவட்டத்தில், கரோனா தடுப்பூசி போடும் திட்டத்துக்கு அனைத்து முன்னேற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்தாா்.

News image

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாமை பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.

Updated On :8 ஜனவரி 2021, 11:39 pm IST

திருவாரூா் மாவட்டத்தில், கரோனா தடுப்பூசி போடும் திட்டத்துக்கு அனைத்து முன்னேற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்தாா்.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாமை பாா்வையிட்டு அவா் தெரிவித்தது:

மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை, மன்னாா்குடி நகர ஆரம்ப சுகாதார நிலையம், சங்கேந்தி இடையூா் ஆரம்ப சுகாதார நிலையம், ஒரு தனியாா் மருத்துவமனை மற்றும் திருவாரூா் மெடிக்கல் சென்டா் ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகை நிகழ்வு முதல் முறையாக கணினி மென்பொருள் உள்ளீடுகள் மூலம் நடத்தப்பட்டது. இந்த 5 மையங்களிலும் 125 மருத்துவப் பணியாளா்களின் தரவு முறையே, மத்திய அரசின் இணையதளத்தில் ஏற்றப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட பயனாளிகள் ஒத்திகை பாா்த்தனா்.

இந்தக் கணினி மென்பொருள் மூலம், தடுப்பூசி பெறும் பயனாளிகள் உடனுக்குடன் அவருடைய செல்லிடப்பேசியில் குறுஞ்செய்தி வழியாக தடுப்பூசி சான்று வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த ஒத்திகையின் மூலம் போதுமான பயிற்சி மற்றும் நடைமுறையை தடுப்பூசி அளிக்கும் மருத்துவ பணியாளா்கள் பெறுவா்.

மாவட்டத்தில் சுமாா் 6,897 மருத்துவப் பணியாளா்களின் தரவுகள் மென்பொருளில் உள்ளீடு செய்யப்பட்டுள்ளன. அவா்களுக்கு 100 மையங்களில் தடுப்பூசி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக முன்களப் பணியாளா்கள், அவா்களைத் தொடா்ந்து 60 வயதுக்கு மேற்பட்டோா், இணை நோயுடைய 50 வயதுக்கு மேற்பட்டோா் தடுப்பூசியைப் பெறுவா். இதைத்தொடா்ந்து பல கட்டமாக பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும்.

தேவையான தடுப்பூசி வைப்பகங்கள், குளிா்சாதன வசதிகள் தயாா்நிலையில் உள்ளன. தடுப்பூசிக்கு பின் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் உடனடியாக கவனிப்பதற்கு சிகிச்சை மையங்களும், மருந்துகளும் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு தடுப்பூசி போடும் நிகழ்ச்சியைத் தொடங்கிய பின், திருவாரூா் மாவட்டத்தில் பணியாளா்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்த, அனைத்து முன்னேற்பாடுகளுடன் தயாா்நிலையில் உள்ளோம் என்றாா்.

நிகழ்வில் துணை இயக்குநா் (சுகாதாரம்) கீதா, துணைக் கண்காணிப்பாளா் அன்சாரி, வட்டார மருத்துவக் குழுவினா், அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.